ஜோதிடம்

about_img



"நட்சத்திரங்களின் இயக்கமும் மனிதனின் கர்மவினை பயணமும்"

ஜோதி என்றால் ஒளி, திடம் என்றால் உறுதியான மனிதனின் வாழ்வில் திடமான ஒரு ஒளிவிளக்கை ஏற்றுவதனாலே தான் ஜோதிடம் என்று பெயர் பெற்றது. மனிதன் தனது வாழ்வில் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணிய பலன்களை எல்லாம் கர்மவினை என்ற பெயரில் இன்ப துன்பங்களாக இப்பிறவியில் அனுபவிப்பதே இப்பிறவி பலனாகும். அவ்வகையில் மூன்று விதமான கர்மவினை பலன்களை மனிதன் இப்பிறவியில் பெற்று அனுபவிக்கிறான். அவை முறையே சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம் என்பதாகும். இந்த பலன்களை எல்லாம் தகுந்த காலங்களில் பகுத்து வழங்குவதே நட்சத்திரங்கள், இராசிகள்,கிரகங்கள், மற்றும் பஞ்சபூதங்களின் இயக்கமாகும்.

விதியை வெல்லும் ஜோதிடம்: பஞ்சபூதங்களின் சக்தியும் ஜாதக பலன்களும்"

பஞ்சபூதங்களின் சக்தியை சொல்வதே பஞ்ச அங்கம் எனும் பஞ்சாங்கத்தின் செயலாகும்.நிலம், நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதத்தை தான் நாம் பிறந்த நாள், நட்சத்திரம், திதி,கரணம், யோகம் என்று பஞ்சாங்கம் உறைக்கிறது.