மாந்திரீகம்

about_img

மாந்திரீகம்

மாந்த்ரீக சாஸ்திரத்தில் மந் - என்றால் மனம், திறம் என்றால் உறுதி என்று பொருள்படும். மனஉறுதியோடு சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லுமே மந்திரமாகும். ஜோதிட ரீதியாக நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிகள் மனிதனை இயக்குகின்றன.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் சக்திகளும் உலக உயிர்களின் வாழ்வில் மாபெரும் தாக்கங்களை உண்டாக்குகின்றன, ஆதிமனிதன் விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து, கிரக நிலைகளால் உண்டாகும் உடல் மன நோய் பாதிப்புக்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள நட்சத்திர, கிரக, ராசி மற்றும் பஞ்சபூத தத்துவங்களை ஆராய்ந்து அறிந்து தனக்கு உண்டாகும் பாதிப்புகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ள பயன்படுத்திய எந்திர மந்திர பூஜை முறைகளே மாந்திரீகம் ஆகும்.

உலகம் முழுவதும் ஆதி மனிதன் முதல் பயன்படுத்திய கலை மாந்த்ரீகம் ஆகும். பிற்காலத்தில் தோன்றிய சித்தர்கள் தமது தவ ஆற்றலால் பிரபஞ்சம் மட்டுமல்லாது இறைவனையும் தம்வசப்படுத்த முடியும் என்று நிரூபித்து கட்டினார்கள்.




இறைவனையும் வசியப்படுத்த எந்திரங்கள் மந்திரங்கள் பூஜைமுறைகள் மூலிகைகள் யாகங்களை வகுத்து சொல்லியதும் மாந்த்ரீக சித்தியால், பிற்காலத்தில் சித்தர்கள் உலக நன்மைக்காக மாந்த்ரீக கலையை மக்கள் பயன்படுத்தும் விதமாக சிவபெருமானிடம் வேண்டிக்கேட்டதன் பயனாக மாந்த்ரீக கலையின் விபரத்தை சிவபெருமான் பார்வதிதேவிக்கு உரைக்க பார்வதிதேவி நந்திதேவருக்கு உபதேசம் செய்தார், பின்னர் நந்திதேவர் பதினெட்டு சித்தர்களுக்கு திருவாய் மலர்ந்தருளியதே அஷ்ட கர்ம மாந்த்ரீக கலையாகும். மனிதன் தனக்கு உண்டாகும் எதிரிகள் நோய்கள் ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி பேய் பிசாசு பாதிப்புகள், உடலை வருத்தும் நோய்களை நீக்கி கொள்ளவும், குடும்ப ஒற்றுமை, தொழில் வசியம், வியாபார வசியம், தன வசியம், கிரக வசியம், தெய்வவசியம் போன்ற வசியங்களை செய்துகொள்ளவும். வாழ்வில் தான் விரும்பிய பலன்களையெல்லாம் தன் இஷ்டம் போல அமைத்துக்கொள்ள உதவும் கலையே அஷ்ட கர்ம மாந்த்ரீகம் ஆகும். அஷ்ட கர்ம மாந்த்ரீகத்தின் தெளிவான விளக்கங்களை கீழே காணலாம்.

about_img

அஷ்ட கர்மம்

அஷ்ட கர்மம் என்பதன் பொருள் அஷ்ட என்றால் எட்டு என்றும் கர்மம் என்றால் செயல்கள் என்றும் பொருள்படும், அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு வகைகளை குறிக்கும். அவை

வசியம்

அஷ்ட கர்மங்களில் முதலாவதாக கூறப்படும் வசியம் எட்டு உட்பிரிவுகளை கொண்டது. அது

  • சர்வ வசியம் (அனைத்தையும் வசியம் செய்தல்)
  • இராஜ வசியம் (அரசாள்பவர்களை வசியம் செய்தல்)
  • புருஷவசியம் (ஆண்களை வசியம் செய்தல்)
  • ஸ்த்ரீ வசியம் (பெண்களை வசியம் செய்தல்)
  • மிருகவசியம் (மிருகங்களை வசியம் செய்தல்)
  • சர்ப்ப வசியம் (பாம்புகளை வசியம் செய்தல்)
  • சத்துரு வசியம் (எதிரிகளை வசியம் செய்தல்)
  • லோகவசியம் (சர்வ லோகங்களையும் வசியம் செய்தல்) என்பனவாகும்.